கிராம பகுதி என்பதால் ஒரு கால பூஜை மட்டுமே செய்யப்படுகிறது. இந்த கோயிலுக்கு அருகில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ராட்டின கிணறு அமைக்கப்பட்டது. இந்த கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து தான் லட்சுமி நாராயண பெருமாளுக்கு பூஜைகள் செய்யப்பட்டது. மேலும், அந்த கிராமத்தில் உள்ள மக்கள் இந்த கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து குடிக்கவும், சமைப்பதற்கும் பயன்படுத்தி வந்தனர். கடந்த, சில ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமலும், குப்பைகளாலும் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. அந்த வழியாக செல்வோர் மூக்கை மூடியபடி செல்கின்றனர்.
மேலும், இந்த ராட்டின கிணற்றை மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் நிர்வாகத்தினர் முறையாக பராமரிக்காமல் விட்டதால் கிணற்றின் சுற்று சுவரில் விரிசல் ஏற்பட்டு இன்றோ அல்லது நாளையோ இடிந்து விழும் நிலையில் பாழடைந்து காட்சியளிக்கிறது. அந்த கிணற்றில் கொசுக்கள் முட்டையிட்டு, குஞ்சு பொறித்து அங்குள்ளவர்களை கடித்து துன்புறுத்துவதால், பல்வேறு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், பாழடைந்த கிணற்றில் இருந்து பாம்பு, பூரான், தேள் உள்ளிட்ட விஷ ஜந்துகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் அருகில் உள்ள வீடுகளுக்கு படையெடுப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மேலும், கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடும் துர்நாற்றம் வீசுவதால், நேரில் வர அச்சப்பட்டு போன் மூலம் மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் நிர்வாகத்தினரை திட்டி தீர்ப்பதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து சம்மந்தப்பட்ட தலசயன பெருமாள் கோயில் நிர்வாகத்துக்கு பொதுமக்கள், பக்தர்கள் புகார் தெரிவித்தால், கோயில் நிர்வாகத்தினர் நாங்கள் என்ன செய்வது உண்டியலில் யாருமே பணம் போடுவதில்லை. அப்படி, இருக்கும் பட்சத்தில் எப்படி கோயில் கிணற்றை சீரமைக்கவும், நிர்வகிக்கவும் முடியும். இந்து சமய அறநிலையத் துறை உயரதிகாரிகளிடம் நேரில் சென்று முறையிடுங்கள் என முறையற்ற பதில் கூறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, இந்து சமய அறிநிலையத் துறை உயரதிகாரிகள் உடனடியாக தலையிட்டு லட்சுமி நாராயண பெருமாள் கோயில் ராட்டின கிணற்றை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post குழிப்பாந்தண்டலத்தில் பராமரிப்பு இல்லாததால் பழடைந்து தூர்நாற்றம் வீசும் ராட்டின கிணறு: சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.
