திருவொற்றியூர் 5வது வார்டில் ரூ.1.8 கோடியில் மாநகராட்சி பூங்கா: எம்எல்ஏ திறந்து வைத்தார்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலம் 5வது வார்டுக்குட்பட்ட எண்ணூர் விரைவு சாலை, கே.வி.கே.குப்பம் அருகே, சென்னை 2.0 திட்டத்தின் கீழ், எம்ஆர்எப் நிறுவனத்தின் ஓ.எஸ்.ஆர்.நிலம் சுமார் 22 கிரவுண்டு நிலத்தில் கவுன்சிலர் கே.பி.சொக்கலிங்கம் கோரிக்கையின் அடிப்படையில் ரூ.1.8 கோடி மதிப்பீட்டில் உடற்பயிற்சி மற்றும் யோகா கூடம், சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், அலங்கார நீர்வீழ்ச்சி போன்ற அனைத்து வசதிகளுடன் நவீன பூங்கா அமைக்கப்பட்டது. இதற்கான பணிகள் முடிவடைந்ததையொட்டி, திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

கவுன்சிலர் கே.பி.சொக்கலிங்கம் தலைமை வகித்தார். கே.பி.சங்கர் எம்எல்ஏ பங்கேற்று, பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, மரக்கன்றுகளை நட்டார். நிகழ்ச்சியில் மண்டல உதவியாளர் நரேந்திரன், முன்னாள் நகர மன்ற துணை தலைவர் வி.ராமநாதன், கவுன்சிலர்கள் ஜெயராமன், கோமதி சந்தோஷ், மற்றும் திமுக நிர்வாகிகள், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post திருவொற்றியூர் 5வது வார்டில் ரூ.1.8 கோடியில் மாநகராட்சி பூங்கா: எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: