சோனியாவை அவமதித்த பா.ஜ எம்எல்ஏவுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவை அவமதித்த பா.ஜ எம்எல்ஏ பசவனபாட்டில் யத்னால் கவுடாவுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ எம்எல்ஏ பசவனபாட்டில் யத்னால் கவுடா காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை விஷக்கன்னி என்று விமர்சனம் செய்தார்.

இதுபற்றி கோப்பால் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் காங்கிரசார் புகார் அளித்தனர். இதுபற்றி விசாரித்த தேர்தல் கமிஷன் இன்று மாலைக்குள் விளக்கம் அளிக்கும்படி எம்எல்ஏ பசவனபாட்டில் யத்னால் கவுடாவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

The post சோனியாவை அவமதித்த பா.ஜ எம்எல்ஏவுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Related Stories: