புழல் பெண்கள் சிறையில் மணப்பெண் அழகுகலை பயிற்சி: 70 பெண் கைதிகளுக்கு சான்றிதழ்

சென்னை: புழல் மத்திய பெண்கள் சிறையில், சென்னை விஐடி போபால் பல்கலைக்கழகத்தின் சார்பில், ரூ. 1 லட்சம் மதிப்பிலான ஒருங்கிணைந்த மணப்பெண் அழகுகலை பயிற்சி கடந்த ஒரு மாதகாலமாக நடந்தது. இதில், 70 பெண் கைதிகளுக்கு, சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி பெண்கள் சிறையில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, சென்னை சரக சிறைத்துறை துணைத் தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். பல்கலைக்கழக உதவி துணை தலைவர் காதம்பரி எஸ்.விஸ்வநாதன் கலந்து கொண்டு, பயிற்சி முடித்த 70 பெண் கைதிகளுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார். இதில், தண்டனை சிறை கண்காணிப்பாளர் நிகிலா நாகேந்திரன், தனியார் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post புழல் பெண்கள் சிறையில் மணப்பெண் அழகுகலை பயிற்சி: 70 பெண் கைதிகளுக்கு சான்றிதழ் appeared first on Dinakaran.

Related Stories: