தினமும் ஆயிரக்கணக்கான மக்கள், குறிப்பாக இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் என எல்லோரும் வந்து செல்லும் மால்களில் டாஸ்மாக் தானியங்கி இயந்திரம் மக்களுக்கு என்ன மாதிரியான எண்ணத்தை விதைக்கும் என்ற யோசனை இல்லையா, ஏற்கனவே பள்ளி மாணவ, மாணவிகள் சீருடை அணிந்தே மதுபானங்கள் அருந்துவது ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளது. சாதாரண குளிர்பானங்களை அருந்துவதே உடல் நலத்திற்கு கேடு என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி வரும் நிலையில், மதுபானங்களை தாராளமாக பயன்படுத்த இளைஞர்களை தூண்டுவது தவறான நடவடிக்கையாகும். இயந்திரம் மூலம் மதுபானம் விற்பனை செய்யும் திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.
The post இயந்திரம் மூலம் மது விற்பனை திட்டத்தை கைவிட வேண்டும்: அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை appeared first on Dinakaran.
