திட்டங்களை செயல்படுத்துவதில் காலதாமதம் கூடாது; மக்களோடு பழகி அவர்களின் தேவையை அறிந்து செயல்படுங்கள்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

விழுப்புரம்: மக்களோடு பழகி அவர்களின் தேவையை அறிந்து செயல்படுங்கள் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார். களஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் விழுப்புரத்தில் நடந்த கள ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,

அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்:

அறிவிக்கப்பட்ட திட்டம் விரைவில் தொடங்கப்பட்டு குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் தெரிவித்தார். ஒவ்வொரு திட்டமும் எந்த அளவுமுன்னேற்றம் கண்டுள்ளது என்பதை எனது அறையில் உள்ள டேஷ் போர்டு மூலம் அறிந்து வருகிறேன். அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை வேகப்படுத்த அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார். ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களை முழுமையாக அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறினார்.

மக்களின் தேவையை அறிந்து செயல்படுங்கள்:

மக்களோடு பழகி அவர்களின் தேவையை அறிந்து செயல்படுங்கள் என அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுரை வழங்கினார். குடிநீர், பட்டா வழங்குதல் உள்ளிட்ட மக்களின் அன்றாட தேவையை பூர்த்தி செய்ய முனைப்புடன் செயல்பட வேண்டும். கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை திருப்தி தரும் வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும். விவசாயிகள் வாழ்வு மேம்பட முக்கியமான திட்டம் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம். புதிய சிறுதொழில் முனைவோர்களுக்கு ஏராளமான திட்டங்களை ஆட்சியர்கள் செயல்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்:

பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து செயல்படுவது திட்டங்களின் சீரான செயல்பாட்டுக்கு ஏதுவாக இருக்கும். திறமை மிக்க அலுவலர்கள் என்பதை நிரூபித்து மக்களின் நன்மதிப்பை பெற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

திட்டங்களை செயல்படுத்துவதில் காலதாமதம் கூடாது:

திட்டங்களை செயல்படுத்துவதில் அதிகாரிகள் தேவையற்ற காலதாமதம் ஏற்படுத்தக்கூடாது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்ற கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது உரையில் இவ்வாறு தெரிவித்தார்.

The post திட்டங்களை செயல்படுத்துவதில் காலதாமதம் கூடாது; மக்களோடு பழகி அவர்களின் தேவையை அறிந்து செயல்படுங்கள்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: