நீலகிரி மாவட்டம் உதகை அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பழங்குடியின மாணவி கொல்லப்பட்ட வழக்கில் ரஜினேஷ் குட்டன் சரண்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பழங்குடியின மாணவி கொல்லப்பட்ட வழக்கில் மாணவி வழக்கில் தொடர்புடையதாக கருத்தப்படக்கூடிய முக்கிய நபர் ரஜினேஷ் குட்டன் பைக்காரா காவல்நிலையத்தில் சரணடைந்திருப்பதாக முக்கிய தகவல் வெளியாகியிருக்கிறது.

நேற்று முந்தினம் மாலை உதகை அருகே தனியார் பள்ளியில் படித்து வந்த பழங்குடியின மாணவி மற்றும் அதே பகுதியை சேர்ந்த உறவினரான ரஜினேஷ் குட்டன் வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி, வீட்டிற்கு அருகாமையிலுள்ள முட்புதரில் வைத்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்து, பின்பு அந்த மாணவியை கொடூரமாக கொலை செய்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக நேற்று முதல் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, நீலகிரி மாவட்டம் முழுவதுமாக ரஜினேஷ் குட்டன் பயன்படுத்திய செல்போன் வைத்து தேடுதல் பணியானது தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. இந்த நிலையில் இன்று காலை ரஜினேஷ் குட்டன் பைக்காரா காவல்நிலையத்தில் நஞ்சநாடு வி.ஏ.ஓ. பிரியா முன்னிலையில் பைக்காரா காவல்நிலையத்தில் சரன்னடைத்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணையானது தொடர்ந்து காவல் நிலையத்தில் நடைபெற்று வருகின்றது, ரஜினேஷ் குட்டன் மற்றும் தனியாக சென்று மாணவியை கொலை செய்துள்ளார், அல்லது நண்பர்களுடன் சேர்ந்து சென்றுள்ளார் என்று பல்வேறு கோணத்தில் தற்போது ரஜினேஷ் குட்டனை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

The post நீலகிரி மாவட்டம் உதகை அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பழங்குடியின மாணவி கொல்லப்பட்ட வழக்கில் ரஜினேஷ் குட்டன் சரண் appeared first on Dinakaran.

Related Stories: