திருவள்ளூர் மாவட்டத்தில் உளுந்து அறுவடைக்கு இயந்திரம்: விவசாயிகள் கோரிக்கை

திருத்தணி: விவசாயிகளுக்கு உளுந்து அறுவடைக்கு இயந்திரம் வழங்க வேண்டும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.திருத்தணி, திருவலங்காடு அதை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர். இவர்கள் வேர்க்கடலை, கரும்பு உள்ளிட்ட பல்வேறு பயிர்களை பயிர் செய்து வருகின்றன. இதன் மூலம் விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். விவசாயிகளுக்கு நவீன உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நெல், கரும்பு அறுவடை செய்ய இயந்திரங்கள் வந்துவிட்டது. வேர்க்கடலை டிராக்டர் மூலம் விதைக்கப்படுகிறது.

தற்போது, பச்சைப்பயிறு, உளுந்து, சிறுதானிய பயிர்களை பயிரிட விவசாயிகளை தமிழக அரசு ஊக்குவித்து வருகிறது. அதன்படி விவசாயிகளும் வேளாண்மை துறை அதிகாரிகளில் முயற்சியின் அடிப்படையில் தானிய பயிர்களை பயிரிட முன்வந்துள்ளனர். இந்த தானிய பயிர்களை அறுவடை செய்வதற்கு மிக கடினமாக உள்ளது. இதற்கான ஆட்கள் கிடைப்பதில்லை. அனைவரும் 100 நாள் வேலை திட்ட பணிக்கு சென்று விடுகின்றனர்.

இந்நிலையில், பச்சை பயிர்களை உழுது நிலத்தில் விதை போட்டதும், அறுவடைக்கு தயாராகும். இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்யப்படுகிறது. ஆனால், உளுந்து போன்ற சில வகையான பயிர்களை அறுவடை செய்வதற்கான இயந்திரங்கள் கிடைப்பதில்லை. தென் தமிழகத்தில் இதற்கான இயந்திரங்கள் எளிதாக கிடைக்கிறது. வடதமிழகத்தில் கிடைப்பதில்லை. இங்கும் இந்த இயந்திரங்களை கொண்டு வர கலெக்டர் நடவடிகை எடுக்கவேண்டும். உளுந்து பயிரிடும்போது உற்பத்தி அதிகரித்து உரிய விலை விவசாயிகளுக்கு கிடைக்கும். குறைந்த விலையில் நுகர்வோர்களுக்கும் கிடைக்கும்.

எனவே, உளுந்து அறுவடை செய்யும் இயந்திரத்தை தமிழக அரசும், கலெக்டரும் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகளவில் கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவைத்துள்ளனர்.விவசாயிகளுக்கு வாகனங்கள் கிடைப்பதில்லை திருத்தணி கோட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை உள்ளது. இந்த துறை மூலம் உழவு செய்வதற்கும் நிலம் சமன்படுத்துவதற்கும் வேளாண்மை பொறியியல் துறை மூலம் உழவு செய்ய பயன்படும் டிராக்டர், பொக்லைன் உள்ளிட வாகனங்கள் வாடகைக்கு விடப்படும். இந்த வாகனங்கள் உரியநேரத்தில் விவசாயிகளுக்கு கிடைப்பல்லை. எனவே உரிய நேரத்தில் விவசாயிக்கு வேளாண்மை பொறியியல் துறை உதவி புரிந்தால் ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு பயன்படும்.

The post திருவள்ளூர் மாவட்டத்தில் உளுந்து அறுவடைக்கு இயந்திரம்: விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: