காங்கிரஸ் அறக்கட்டளைக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய அகில இந்திய தலைவருக்கு அதிகாரம்: செயற்குழு கூட்டத்தில் முடிவு

சென்னை: ‘தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளைக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்யும் அதிகாரத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவருக்கு வழங்குவது’ என்று காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னை சத்திய மூர்த்தி பவனில் நேற்று நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளையில் காலியாக உள்ள 4 உறுப்பினர் பதவிகளுக்கு, புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் 5 பேர். அதில், சுதர்சன நாச்சியப்பன் மட்டுமே தற்போது உள்ளார். எனவே, காலியாக உள்ள 4 உறுப்பினர் பதவிக்கு புதிய உறுப்பினர்களை கட்சி தலைமை விரைவாக தேர்வு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும், புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் முழு அதிகாரத்தையும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வழங்குவது என்று ஒருமனதாக செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டது.

The post காங்கிரஸ் அறக்கட்டளைக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய அகில இந்திய தலைவருக்கு அதிகாரம்: செயற்குழு கூட்டத்தில் முடிவு appeared first on Dinakaran.

Related Stories: