உத்திராகண்டில் கேதர்நாத் யாத்திரை பாதை திறக்கப்பட்டது: மேள, தாளம் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித பயணம்

உத்திராகண்ட்: உத்திராகண்ட் மாநிலத்தில் வானிலை சீரடைந்ததால் பக்தர்கள் பயணம் செய்ய கேதர்நாத் யாத்திரை பாதை திறக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள மிகவும் புகழ்பெற்ற மிக முக்கியமான வழிபாட்டு தலங்களான பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி,எமனோத்ரி ஆகியன உத்திராகண்ட் மாநிலத்தில் தான் அமைந்துள்ளன. சிவனுக்குரிய தலமாக கேதர்நாத் செல்ல ஏராளமான பக்தர்கள் காத்திருந்தனர்.

கடும் பனிப்பொழிவு கனமழை காரணமாக கேதர்நாத் யாத்திரைக்கு அனுமதி தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வானிலை சீரடைந்ததால் திட்டமிட்டபடி கேதார்நாத் யாத்திரை பாதை திறக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் மேளம் அடித்து கொண்டாடி மகிழ்ந்தனர். கேதர்நாத் சிவன் தளம் 3,583மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. வெண்பனிக்கு மத்தியில் மலைப்பாதையை கடந்து சென்று பக்தர்கள் வழிபாடு வருகின்றனர். கோயில் நடை நவம்பர் 23ம் தேதி மூடப்படும்.

The post உத்திராகண்டில் கேதர்நாத் யாத்திரை பாதை திறக்கப்பட்டது: மேள, தாளம் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித பயணம் appeared first on Dinakaran.

Related Stories: