சிசிடிவி கேமராக்களை மறைக்கும் வகையில் வைக்கப்படும் விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும்: மாவட்ட பாஜக இளைஞரணி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜ இளைஞரணி செயற்குழு கூட்டம் திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. செயற்குழு கூட்டத்திற்கு இளைஞர் அணி மாவட்ட தலைவர் எஸ்.டில்லிபாபு தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர்கள் புருஷோத்தமன், திலகரசன் ஆகியோர் வரவேற்றனர். பொருளாளர் தாமோதரன், மாவட்ட துணைத் தலைவர்கள் தினேஷ், மேகவர்ணன், பிரபாகர், ரமணா, மாவட்டச் செயலாளர்கள் பெருமாள், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த செயற்குழு கூட்டத்தில் மாவட்ட தலைவர் அஸ்வின் என்கிற ராஜாசிம்ம மகேந்திரா, இளைஞரணி மாநில செயற்குழு உறுப்பினர் கோபிநாத், மாவட்ட பொதுச் செயலாளர் ஆர்யா சீனிவாசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். இதில் இளைஞர் அணி மண்டல் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் என 100 பேர் கலந்து கொண்டனர். இந்த செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு, பொதுமக்களுக்கு பாதுகாப்பிற்காக பொது இடங்களில் சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த சிசிடிவி கேமராக்களை மறைக்கும் வகையில் விளம்பர பலகைகள் வைக்கப்படுகிறது.

எனவே அதனை அகற்ற வேண்டுமென்றும், மாவட்டத்தில் பல்வேறு சாலைகள் மிக மோசமான நிலையில் உள்ளதால் சாலைகளை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பட்டியலின மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பட்டா இல்லாமல் இருப்பதால் அவர்களுக்கு பட்ட வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், லட்சுமாபுரம் கிராமத்தில் ரேஷன் கடை தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. எனவே அரசு புதிய கட்டிடம் கட்டித்தரவேண்டும் என்றும், சிற்றம்பாக்கம் ஊராட்சியில் சுடுகாட்டில் பிணங்களை புதைக்க இடம் இல்லாமல் ஒன்றின் மீது ஒன்றாக புதைக்கக் கூடிய நிலமை உள்ளது எனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் சுடுகாட்டிற்காக புதிய இடம் ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என்றம் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

The post சிசிடிவி கேமராக்களை மறைக்கும் வகையில் வைக்கப்படும் விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும்: மாவட்ட பாஜக இளைஞரணி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Related Stories: