தூத்துக்குடி துறைமுகத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: பசுமை இந்தியா திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தை பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு உலக பூமி தினத்தையொட்டி தூத்துக்குடி வ.உ.சி துறைமுக வளாகத்தில் 10,000 மரங்கள் நடப்பட்டுள்ளன. நேற்று உலக பூமி தினம் கொண்டாடப்பட்ட நிலையில் மரங்கள் குறித்த வீடியோவை பிரதமர் மோடி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் பசுமை இந்தியா திட்டத்தின் கீழ் தூத்துக்குடி துறைமுகத்தின் செயல்பாடுகளுக்காக பிரதமர் மோடி தமிழில் டுவீட் செய்து பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பை நோக்கிய உன்னதமான மற்றும் தொலைநோக்குடன் கூடிய முயற்சிக்கு தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்துக்கு நல்வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளார்.

The post தூத்துக்குடி துறைமுகத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: