அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் சித்திரைத்தேர் திருவிழா பந்தல்கால் முகூர்த்தம்: 25ம் தேதி கொடியேற்றம்

 

குளித்தலை: அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் சித்திரைத்தேர் திருவிழா பந்தல்கால் முகூர்த்தம் நடைபெற்றது. வரும் 25ம் தேதி கொடியேற்று விழா நடைபெறுகிறது. கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த அய்யர்மலையில் உள்ளது சிவ தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ரத்தகிரீஸ்வரர் கோயில். இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர் திருவிழா12 நாள் நடைபெறுவது வழக்கம். உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்தும் வெளி மாவட்டங்கள் வெளி மாவட்ட மாநிலத்திலிருந்தும் லட்சக்கணக்கான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொள்ளும் விழாவாக இருந்து வருகிறது. இந்த கோயிலின் சித்திரை தேர் திருவிழா நேற்று கால்கோல் விழா உடன் தொடங்கியது.

தொடர்ந்து வருகிற மே 25 செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு மேல் 9 மணிக்குள் விக்னேஸ்வர் பூஜை செய்து 12 மணிக்குள் மலை உச்சியில் முதல் நாள் நிகழ்ச்சியாக கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இரவு புஷ்ப விமானத்தில் சாமி புறப்பாடு நடைபெறுகிறது. 2ம் நாள் 26 ம் தேதி (புதன்கிழமை) பகல் பல்லக்கு, இரவு சாமி நந்தி வாகனத்தில் அம்மன் கமல வாகனம் வீதி உலா நடைபெறும். 27 ம் தேதி வியாழக்கிழமை பகல் பல்லக்கு இரவு சுவாமி பூத வாகனத்தில் அம்மன் சிம்ம வாகனத்திலும் வீதி உலா நடைபெறுகிறது. 4ம் நாள் 28ம் தேதி வெள்ளிக்கிழமை பகல் பல்லக்கு இரவு சாமி கைலாச வாகனத்தில் அம்மன் சேஷ வாகனத்திலும் வீதி உலா நடைபெறும்.

முக்கிய விழாவான ஐந்தாம் நாள் 29 ம் தேதி பகல் பல்லக்கு இரவு 7 மணிக்கு மேல் எட்டு மணிக்குள் விருச்சிக லக்னத்தில் திருக்கல்யாணம் மாலை ஒன்று பாதையில் ஊஞ்சல் பொன்னிடும் பாறையில் சுந்தருக்கு பொற்கிழி அளித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பகல் பல்லக்கு இரவு சாமி யானை வாகனத்தில் அம்மன் அம்ச வாகனத்திலும் வீதி உலா, மே1ம் தேதி பகல் பல்லக்கு இரவு சாமி இந்திர வாகனத்தில் வீதி உலா நடைபெறுகிறது. திருவிழாவில் முக்கிய விழாவான 8ம் நாள் மே 2 ம் தேதி மதியம் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, பகல் பல்லக்கு இரவு 12 மணி அளவில் சுவாமி குதிரை வாகனம் அம்மன் புஷ்ப வாகனத்தில் வீதி உலா நடைபெறுகிறது.

9ம் நாள் திருவிழா மே 3ம் தேதி புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு தேர் ஏறும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று காலை 5.30 மணிக்கு மேல்6.30 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 12ம் நாள் மே 6ம் தேதி சனிக்கிழமை இரவு மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாட்டினை அறநிலை துறை உதவி ஆணையர் ஜெயதேவி, செயல் அலுவலர் அனிதா மற்றும் கோயில் குடி பாட்டு காரர்கள், சிவாச்சாரியார்கள் கோயில் பணியாளர்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

The post அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் சித்திரைத்தேர் திருவிழா பந்தல்கால் முகூர்த்தம்: 25ம் தேதி கொடியேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: