பழைய பொருட்கள் குடோனில் தீவிபத்து

பெரம்பூர்: கொருக்குப்பேட்டை மூப்பனார் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் நடராஜன் (62). இவர் கொடுங்கையூர் தென்றல் நகரில் பழைய பொருட்கள் விற்பனை கடை மற்றும் குடோன் வைத்துள்ளார். நேற்று அதிகாலை 4 மணிக்கு இந்த குடோனில் தீவிபத்து ஏற்பட்டு கரும்புகை வெளிவந்தது. தகவலறிந்து, கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி, செம்பியம், உயர் நீதிமன்றம் உள்ளிட்ட இடங்களில் இருந்து, நிலைய அலுவலர்கள் பரமேஸ்வரன், முனுசாமி, செல்வம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் குடோனில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது.

The post பழைய பொருட்கள் குடோனில் தீவிபத்து appeared first on Dinakaran.

Related Stories: