அரசு ஊழியர்கள் நாட்டுக்காக பணியாற்ற வேண்டும்: பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி வலியுறுத்தல்

சென்னை: அரசு ஊழியர்கள் ஊதியத்துக்காக பணியாற்றாமல் நாட்டுக்காக பணியாற்ற வேண்டும் என்று பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி சட்டப்பேரவையில் வலியுறுத்தினார். சட்டப்பேரவையில் நேற்று காவல் மற்றும் தீயணைப்பு துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று, பெண்ணாகரம் ஜி.கே.மணி (பாமக) பேசியதாவது:
மக்கள் நிம்மதியாக தூங்க வேண்டும் என்றால், போலீசார் விழிப்போடு இருக்க வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு சட்ட, திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது. பல்வேறு துறை வளர்ச்சிக்கு ஒதுக்கப்படும் நிதியை தொகுதி மேம்பாட்டு நிதிக்கு பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணையின்போது பல் உடைக்கப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் இன்னும் கைது செய்யப்படவில்லை. தொடர்ந்து விசாரணை தான் நடந்து கொண்டிருக்கிறது. அரசு ஊழியர்கள் ஊதியத்துக்காக பணியாற்றாமல் நாட்டுக்காக பணியாற்ற வேண்டும். தமிழகத்தில் கஞ்சாவை ஒழிக்க தனிப்படை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post அரசு ஊழியர்கள் நாட்டுக்காக பணியாற்ற வேண்டும்: பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: