சீர்காழியில் நம்முடைய நிழல் நம்மீதே அறிவியல் அதிசயம்

சீர்காழி, ஏப்.20:மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியில் ஏப்ரல் 19ம் தேதி (புதன்கிழமை) அன்று பிற்பகல் சரியாக 12.10 மணிக்கு சீர்காழி, பகுதியில் மட்டும் இன்றய தினம் “நிழலில்லா ” நேரம் அதாவது நம்முடைய நிழல் நம்மீதே இருக்கும் நிகழ்வினை பள்ளி மாணவர்கள், மாணவிகள் வட்ட வடிவில் கைகோர்த்து நின்று இந்த அறிவியல் நிகழ்வினை மாணவர்கள் நேராக பார்த்து அனுபவித்து மகிழ்ந்தனர். இந்த அறிவியல் நிகழ்வு மீண்டும் வருகிற ஆகஸ்ட் மாதம் நிகழ உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் அறிவுடைநம்பி, உதவி தலைமையாசிரியர்கள் முரளிதரன், துளசிரங்கன், வரதராஜன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

The post சீர்காழியில் நம்முடைய நிழல் நம்மீதே அறிவியல் அதிசயம் appeared first on Dinakaran.

Related Stories: