சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டடம் இடிந்து விபத்து; கட்டிட இடிபாடுகளில் யாரேனும் சிக்கி உள்ளார்களா?.. தீயணைப்புத்துறை ஆய்வு..!!

சென்னை: சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டடம் இடிந்து விபத்துக்குள்ளானது. சென்னை பாரிமுனையில் அரண்மனைக்காரர் தெரு மற்றும் நல்லமுத்து நகர் தெரு பகுதியில் பழமை வாய்ந்த கட்டிடம் உள்ளது. இந்த 4 மாடி கட்டிடத்தை புதுப்பிக்கும் பணி நடந்து வந்த நிலையில் திடீரென கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. முதற்கட்டமாக விபத்து குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 4 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்புத்துறையினர் விரைந்துள்ளனர்.

தற்போது கட்டிடம் இடிந்து விழுந்த பகுதியானது பாரிமுனையில் மிகவும் குறுகலான, நெருக்கடியான பகுதியாகும். வியாபாரிகள் அதிகம் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதியாக உள்ளது. தொடர்ந்து, கட்டிட இடிபாடுகளில் யாரேனும் சிக்கி உள்ளார்களா? என்று தீயணைப்புத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். பேரிடர் மீட்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அப்பகுதியில் உள்ள காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

The post சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டடம் இடிந்து விபத்து; கட்டிட இடிபாடுகளில் யாரேனும் சிக்கி உள்ளார்களா?.. தீயணைப்புத்துறை ஆய்வு..!! appeared first on Dinakaran.

Related Stories: