ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேரோட்ட விழா: கோவிந்தா முழக்கங்களுடன் பக்தர்கள் வழிபாடு

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேரோட்ட விழா விமரிசையாக தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். 108 வைணவ தளங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டமாக போற்றப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இந்த கோவிலில் நடக்க கூடிய முக்கிய விழாக்களில் ஒன்று சித்திரை தேரோட்டம் இந்த ஆண்டு நடத்தப்படும் சித்திரை தேரோட்ட விழா கடந்த 11ம் தேதி கொடிஏற்றத்துடன் தொடங்கியது.

அதனை தொடர்ந்து 10 நாட்கள் ஸ்ரீரங்கத்தில் இருக்க கூடிய நம்பெருமாள், கருட வாகனம், யானை வாகனம், தங்க குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் தினம்தோறும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் 9ம் நாளான இன்று முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெறுகிறது. சரியாக காலை 6 மணிக்கு தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக இந்த தேரில் நம்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

அதைத்தொடர்ந்து 6 மணியளவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கத்திலே ரங்கா ரங்கா என பக்தி முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். ஸ்ரீரங்கத்தை சுற்றி இருக்க கூடிய அந்த 4 வீதிவழியாக தெறந்து வளம் வரும். திருச்சியில் இருக்க கூடிய இந்த ஸ்ரீரங்கம் சித்திரை திருவிழாவானது ஒரு முக்கிய நிகழ்வாக இருப்பதன் காரணமாக திருச்சி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டது.

இந்த விழாவில் திருச்சி மட்டும் அல்லது திருச்சியை சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் ஸ்ரீரங்கத்தில் வருகை தந்திருக்கின்றனர். அதன் காரணமாக ஸ்ரீரங்கம் விழாகோலமாக காட்சியளிக்கிறது. அதிக அளவில் மக்கள் கூடியிருப்பதால் பாதுகாப்பிற்காக 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். இதை தவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் நடவடிக்கை மேற்கொள்ள பட்டிருக்கிறது.

The post ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேரோட்ட விழா: கோவிந்தா முழக்கங்களுடன் பக்தர்கள் வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: