இளையபெருமாளுக்கு மணிமண்டபம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கே.எஸ்.அழகிரி நன்றி

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை: மக்களவை காங்கிரஸ் உறுப்பினராக 1952 முதல் மூன்று முறையும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், பட்டியலின மக்களின் பாதுகாவலராகவும் விளங்கிய எல். இளையபெருமாளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் 110 விதியின் கீழ் வருகிற ஜூன் 26 முதல் நூற்றாண்டு விழா கொண்டாடுவதென முடிவு செய்து, சிதம்பரத்தில் அவரது நினைவை போற்றுகின்ற வகையில் மணிமண்டபம் கட்டுவதென அறிவித்திருக்கிறார். இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நன்றி பெருக்கோடு வரவேற்கிறேன். ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவரோடு இணைந்து பணியாற்றியவன் என்ற முறையில் இந்த அறிவிப்பை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். எல். இளையபெருமாளது புகழை பரப்புகிற முயற்சியை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைவரது பாராட்டுகளையும் பெறுவதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

The post இளையபெருமாளுக்கு மணிமண்டபம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கே.எஸ்.அழகிரி நன்றி appeared first on Dinakaran.

Related Stories: