பொன்னேரியில் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா ஆலோசனை கூட்டம்: வணிகர் சங்கங்கள் இடையே மோதல்: தாசில்தார் சமரசம்

பொன்னேரி: பொன்னேரி தாலூகா அலுவலகத்தில் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா தேர் அலங்காரம் நடத்த வியாபார சங்கத்தினர் ஆலோசனை கூட்டம் தாசில்தார் தலைமையில் நடைபெற்றது.பொன்னேரியில் அகத்தீஸ்வரர் கோயிலும், கரிகிருஷ்ண பெருமாள் கோயிலும் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாத பிரம்மோற்சவ விழாவாக தொடர்ந்து பத்து நாட்கள் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதில் கரிகிருஷ்ண பெருமாள் தேரோட்டமும் அரண் ஹரி சந்திப்பு பெருவிழாவும் நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் நடைப்பெறும் தேரோட்டத்தில் தேர் அலங்காரத்திற்கு உபயோதாரர்களாக பொன்னேரி வியாபாரிகள் சங்கத்தினர் முன்னின்று நடத்தி வருகின்றனர்.

ஆனால் இந்த ஆண்டு நடைபெறும் தேரோட்டத்தில் வெள்ளையன் தலைவராக உள்ள தமிழ்நாடு வணிகர் சங்கத்தினருக்கும் விக்கிரம ராஜா தலைவராக உள்ள தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சங்கத்தினருக்கும் தேர் அலங்காரத்தை யார் செய்வது என்பது குறித்து பிரச்னை ஏற்பட்டது. இதில், மோதல் ஏற்படுத்தும் வகையில் இருந்ததால் இதுகுறித்து பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார் தலைமையில் இதற்கான சமரச கூட்டம் நடைபெற்றது. இதில், வெள்ளையன் மற்றும் விக்ரம ராஜா தரப்பினர் தேர் திருவிழாவில் உபயோதாரர்களாக யார் இருப்பது என்பது குறித்து கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விவாதம் முற்றி காரசாரமான நிலையில் இரு தரப்பினரும் வெளியேறினர். தாசில்தார் செல்வகுமார் பொன்னேரி இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம் ராஜ்,ஆலய செயல் அலுவலர் ராஜசேகர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் இது லட்சக்கணக்கான பொதுமக்கள் நடத்தும் திருவிழா இதில் சட்ட ஒழுங்கு பிரச்னை வரக்கூடாது. எனவே வியாபாரிகள் சங்கங்கள் இதற்கு உரிமை கோரமுடியாது இருதரப்பினரும் ஒன்று சேர்ந்து உபயதாரர்களாக தேர்விழாவை நடத்த வேண்டும். அல்லது ஆலய நிர்வாகமே விழாவை நடத்த வேண்டும் என முடிவாக தாசில்தார் செல்வகுமார் கூறினார். இதற்கு விக்ரமராஜா தரப்பினர் ஒத்துக்கொண்ட நிலையில் வெள்ளையன் தரப்பினர் முடிவெடுக்க அவகாசம் கேட்டு அங்கிருந்து சென்றனர். இருதரப்பு வியாபாரிகளையும் தாசில்தார் செல்வகுமார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தர்.

The post பொன்னேரியில் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா ஆலோசனை கூட்டம்: வணிகர் சங்கங்கள் இடையே மோதல்: தாசில்தார் சமரசம் appeared first on Dinakaran.

Related Stories: