உலக புகழ்பெற்ற தஞ்சை பெருவுடையார் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..!!

தஞ்சை: உலக புகழ்பெற்ற தஞ்சை பெருவுடையார் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டின் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாகவும், சோழர்களின் கட்டிடக்கலைக்கு சான்றாகவும் விளங்கும் தஞ்சை பெருவுடையார் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டு சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

அதிகாலையில் நாதஸ்வர இசையுடன் செண்டை மேளம் முழங்க, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை ஓதி, கோயில் வளாகத்தில் உள்ள தங்க முகாம் பூசப்பட்ட கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டது. சித்திரை திருவிழா கொடியேற்ற நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இன்று முதல் ஒவ்வொரு நாளும், சாமி வீதி உலாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 18 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் அடுத்த மாதம் 1ம் தேதி காலையில் விமர்சியாக நடைபெறவுள்ளது.

The post உலக புகழ்பெற்ற தஞ்சை பெருவுடையார் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Related Stories: