தொழிற்பயிற்சி நிலையங்கள் புதுபிக்க ரூ.18.71 ஒதுக்கீடு: அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்

ராயபுரம் தொகுதி எம்எல்ஏ ஐட்ரீம் இரா.மூர்த்தி: ராயபுரம் தொகுதி 53வது வார்டில் வடசென்னை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் உள்ளது. அது 1966ல் துவங்கப்பட்டது. அதை புதிதாக கட்டி தர வேண்டும். அமைச்சர் சி.வி.கணேசன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 1980, 1970, 19760 போன்ற வருடங்களில் கட்டப்பட்ட இதுபோன்ற பயிற்சி நிலையங்கள், விடுதிகள் எல்லாம் பராமரிக்கப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். இந்த ஆண்டு ரூ.18.71 கோடியை முதல்வர் ஒதுக்கியிருக்கிறார். நிச்சயமாக, விரைவில் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும்.

ஐட்ரீம் இரா.மூர்த்தி: முதல்வருக்கும், அமைச்சருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பணிமனையில் உள்ள மேற்கூரைகள் ஆங்காங்கே உடைந்திருக்கின்றன.

அமைச்சர் சி.வி.கணேசன்: உறுப்பினர் சொன்னவுடேனேயே, உடனடியாக இந்த ஆண்டு அந்த அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், முதல்வர் இந்த ஆண்டு சுமார் ரூ.3 கோடி அளவிற்கு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. தொழிற்பயிற்சி நிலையத்திற்கு ரூ.31 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மாணவர்களுக்கு கருவிகள், தளவாடங்கள், உபகரணங்கள் போன்ற நவீன தொழில்நுட்பக் கருவிகள் வாங்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு விவாதம் நடந்தது.

The post தொழிற்பயிற்சி நிலையங்கள் புதுபிக்க ரூ.18.71 ஒதுக்கீடு: அமைச்சர் சி.வி.கணேசன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: