ஆவடி காவல் ஆணையரகத்தில் 7 பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு

ஆவடி: ஆவடி காவல் ஆணையரகத்தில், வழிப்பறியில் ஈடுபட்ட 7 பேரை ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி அம்பத்தூர், மாதவரம் வழிப்பறி வழக்கில் தொடர்புடைய புளியந்தோப்பு, கே.பி. பார்க்கைச் சேர்ந்த தினேஷ் (22), மணலியைச் சேர்ந்த டேவிட் (22), தேவேந்திர பிரசாத், (26), திருநின்றவூர் மற்றும் கொரட்டூர் வழிப்பறி வழக்கில் தொடர்புடைய கொழுமுடிவாக்கம் மங்களபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ் (26), சென்னை ஷெனாய் நகரைச் சேர்ந்த வினோத்குமார் (22), புழல், காவாங்கரையைச் சேர்ந்த சிவகுரு (26), கொளத்தூர் மதன குப்பத்தைச் சேர்ந்த பிரவீன் (24) ஆகிய 7 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் நேற்று சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த ஆண்டு இதுவரை 98 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

The post ஆவடி காவல் ஆணையரகத்தில் 7 பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு appeared first on Dinakaran.

Related Stories: