பாலமேடு அருகே கோலாகலமாக நடைபெற்ற வடநாடு மஞ்சுவிரட்டு போட்டி: சீறிப்பாய்ந்த காளைகளை தீரத்துடன் அடக்கிய வீரர்கள்..!!

மதுரை: மதுரை மாவட்டம் பாலமேடு அருகே கோலாகலமாக நடைபெற்ற வடநாடு மஞ்சுவிரட்டு போட்டியில், காளைகள் சீறிப்பாய்ந்தன. மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ளது எம்.பள்ளப்பட்டி கிராமம். இக்கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்தாலம்மன் கோவில் பங்குனி உற்சவ திருவிழாவினை முன்னிட்டு வடநாடு மஞ்சுவிரட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது. ஒரு காளைக்கு 9 வீரர்கள் கொண்ட ஒரு குழு களமிறக்கப்பட்டது. 9 வீரர்கள் கொண்ட குழு 25 நிமிடங்களில் காளையை மடக்கி பிடிக்க வேண்டும்.

அவ்வாறு மாட்டை பிடித்தால் வீரர்கள் குழுவிற்கு பரிசு வழங்கப்படும். உரிய நேரத்தில் மாடு பிடிபடவில்லை என்றால் மாட்டு உரிமையாளருக்கு பரிசு வழங்கப்படும். இவ்வாறு மொத்தம் 12 சுற்றுகளாக 12 காளைகள் களத்தில் இறங்கியது. இதில் காளைகளை பிடித்த வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் அண்டா, கட்டில், குத்துவிளக்கு, ரொக்கப்பணம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

The post பாலமேடு அருகே கோலாகலமாக நடைபெற்ற வடநாடு மஞ்சுவிரட்டு போட்டி: சீறிப்பாய்ந்த காளைகளை தீரத்துடன் அடக்கிய வீரர்கள்..!! appeared first on Dinakaran.

Related Stories: