ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக இன்று ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கிறார் சச்சின் பைலட் : பதறும் காங்கிரஸ்

ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏவான சச்சின் பைலட் அரசுக்கு எதிராக இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ள நிலையில், அமைதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு கட்சி மேலிட பொறுப்பாளர் அழைப்பு விடுத்துள்ளார். ராஜஸ்தானில் முன்னாள் துணை முதல்வரும் எம்எல்ஏவுமான சச்சின் பைலட்டுக்கும் முதல்வர் அசோக் கெலாட்க்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் முற்றி வருகிறது. இன்னும் சில மாதங்களில் அங்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சச்சின் பைலட் அறிவித்த உண்ணாவிரதப் போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முந்தைய பாஜக ஆட்சியில் முதல்வராக இருந்த வசுந்த்ரா ராஜே உள்ளிட்டோர் மீதான ஊழல் புகாரில் நடவடிக்கை எடுக்க 1.5 ஆண்டுகளுக்கு முன்பே கோரிக்கை விடுத்ததாகவும் அசோக் கெலாட் தனது கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றும் சச்சின் பைலட் குற்றம் சாட்டியுள்ளார்.அந்த கோரிக்கையை முன்வைத்து அவர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ள நிலையில், இது கட்சியின் நலனுக்கு எதிரானது என ராஜஸ்தான் பொறுப்பாளர் சுக்ஜிந்தர்சிங் தெரிவித்துள்ளார். மேலிட பொறுப்பாளராக தாம் பதவியேற்ற 5 மாதங்களில் இந்த விவகாரம் குறித்து சச்சின் பைலட் தன்னிடம் பேசவில்லை என கூறியுள்ள அவர், அமைதி பேச்சுவார்த்தைக்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் சொந்த கட்சிக்கு எதிரான போராட்டம்கட்சி நலனுக்கு எதிரானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக இன்று ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கிறார் சச்சின் பைலட் : பதறும் காங்கிரஸ் appeared first on Dinakaran.

Related Stories: