லண்டன் உயிரியல் பூங்காவில் விலங்குகளுக்கு வழங்கிய ஈஸ்டர் முட்டைகள்..!!

லண்டனில் உள்ள உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் விலங்குகளுக்கு உணவுகள் அடங்கிய ஈஸ்டர் முட்டைகள் வழங்கப்பட்டது.

அழிவின் விளிம்பில் உள்ள சுமத்ரா புலிகள், பாலைவன கீரிகள் மற்றும் அணில் குரங்குகள் லண்டன் ZSL உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு அவைகளுக்கு பிடித்த உணவுகள் வைக்கப்பட்ட வண்ணமயமான ஈஸ்டர் முட்டைகள் மற்றும் பொம்மைகள் வழங்கப்பட்டது.

முட்டைகளை உடைத்து அதற்குள் வைக்கப்பட்ட உணவுகளை விலங்குகள் உற்சாகமாக உட்கொண்டன.

The post லண்டன் உயிரியல் பூங்காவில் விலங்குகளுக்கு வழங்கிய ஈஸ்டர் முட்டைகள்..!! appeared first on Dinakaran.

Related Stories: