இறுதி பிரார்த்தனையில் பங்கேற்க மீண்டும் லக்கிம்பூர் சென்ற பிரியங்கா: உத்தரபிரதேசத்தில் பலத்த பாதுகாப்பு

லக்கிம்பூர்: லக்கிம்பூர் வன்முறையில் பலியான விவசாயிகளின் இறுதி பிரார்த்தனையில் பங்கேற்பதற்காக  காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி லக்னோவில் இருந்து லக்கிம்பூர் கேரி பகுதிக்கு புறப்பட்டு சென்றார். உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்கிம்பூரில் போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற பிரியங்கா காந்தி  கடந்த 4ம் தேதி சென்றபோது அவரை போலீசார் தடுத்து காவலில் வைத்தனர்.  இதேபோல், ராகுல்காந்தியையும் அப்பகுதிக்கு செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. தொடர்ந்து ராகுல், பிரியங்கா உள்ளிட்ட  5 பேர் மட்டும் லக்கிம்பூர் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து 6ம் தேதி இரவு 10 மணியளவில் அவர்களது குடும்பத்தினரை சந்தித்து ராகுல், பிரியங்கா இருவரும் ஆறுதல் தெரிவித்தனர். இந்நிலையில், போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் இறுதி பிரார்த்தனை  இன்று நடைபெறுகிறது. இதில், பங்கேற்பதற்காக பிரியங்கா காந்தி லக்னோவில் இருந்து லக்கிம்பூர் புறப்பட்டு சென்றார். பிரியங்காவின் வருகையையொட்டி அப்பகுதியில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். லக்னோ – சீதாபூர் – லக்கிம்பூர் நெடுஞ்சாலையில் பலத்த தடுப்பு மற்றும் போலீஸ் சோதனைகள் காணப்படுகின்றன. பஞ்சாப், அரியானா, உத்தரகண்ட் மற்றும் உத்தரபிரதேசத்தின் பிற பகுதிகளில் இருந்தும் விவசாயிகள், இறுதி பிரார்த்தனை நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது….

The post இறுதி பிரார்த்தனையில் பங்கேற்க மீண்டும் லக்கிம்பூர் சென்ற பிரியங்கா: உத்தரபிரதேசத்தில் பலத்த பாதுகாப்பு appeared first on Dinakaran.

Related Stories: