கறம்பக்குடியில் உரிமையியல், நீதித்துறை நடுவர் நீதி மன்றம் திறப்பு

கறம்பக்குடி: கறம்பக்குடியில் உரிமையியல், நீதித்துறை நடுவர் நீதிமன்றம் நேற்று திறக்கப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு அரசுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை தற்போதைய திமுக அரசு ஏற்று பேரூராட்சி அலுவலக தாலுகா பழைய அலுவலமாக செயல்பட்டு வந்த பேரூராட்சி சமுதாய கூடத்தை ரூ.20லட்சம் செலவில் நீதிமன்றம் அமைக்க பணிகள் நடைபெற்று முடிந்தன. பணிகள் நடைபெறும் போது மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார், மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல்காதர் ஆகியோர் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டனர்.

பணிகள் நிறைவுற்ற பின்பு நேற்று காலை சட்டதுறை அமைச்சர் ரகுபதி காணொளி வாயிலாக கறம்பக்குடியில் உரிமையியல் மற்றும் நீதி துறை நடுவர் நீதிமன்றத்தை துவக்கி வைத்தார். இதையொட்டி கறம்பக்குடி நீதிமன்ற வளாகத்தில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன், பேரூராட்சி தலைவர் முருகேசன், பேரூராட்சி செயல்அலுவலர் கார்த்திகேயன் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், வழக்கறிஞர்கள் முருகேசன், மதியழகன் மற்றும் பலர் உடன் இருந்தனர். திமுக ஒன்றிய செயலாளர் பேரூராட்சி தலைவர் மற்றும் நகர செயலாளர் உள்ளிட்ட பலர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். கறம்பக்குடியில் நீதிமன்றம் அமைத்து கொடுத்த தமிழக முதல்வருக்கும், சட்டத்துறை அமைச்சருக்கும் கறம்பக்குடி பொதுமக்கள் நன்றி தெரிவித்து கொண்டனர். தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி

The post கறம்பக்குடியில் உரிமையியல், நீதித்துறை நடுவர் நீதி மன்றம் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: