(தி.மலை) அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள்சிறப்பு அலுவலர் ஆய்வுதிருவண்ணாமலையில் அடுத்த மாதம் சித்ரா பவுர்ணமி விழா

திருவண்ணாமலை, ஏப்.9: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக அறநிலைய துறை சிறப்பு அலுவலர் குமரகுருபரன் ஆய்வு செய்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. குறிப்பாக, பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் மட்டுமே பக்தர்கள் வருகை அதிகரித்திருந்த நிலை மாறி, வார இறுதி நாட்களிலும், அரசு விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. மேலும், வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக பவுர்ணமி நாட்களில் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இதுவரை எப்போதும் இல்லாத அளவில் பக்தர்கள் வருகை அதிகரித்திருப்பதால், பக்தர்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியமாகியிருக்கிறது. இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற சித்ரா பவுர்ணமி விழா அடுத்த மாதம் 5ம் தேதி நடைபெறுகிறது. அதையொட்டி, சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் 4ம் தேதி இரவு 11.58 மணிக்கு தொடங்கி,வாய்ப்பு உள்ளது. கோடை கால விடுமுறை என்பதால் சித்ரா பவுர்ணமியன்று 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என எதிர்பார்க்கப் 5ம் தேதி இரவு 11.38 மணிக்கு நிறைவடைகிறது. 5ம் தேதி இரவு தான் கிரிவலத்துக்கு உகந்தது என்றாலும், 2 நாட்களும் பக்தர்கள் வருகை அதிகரித்திருக்கும் படுகிறது. அதையொட்டி, சித்ரா பவுர்ணமிக்காக முன்னேற்பாடுகள் இப்போதே திட்டமிட தொடங்கியுள்ளனர்.

அதன்படி, தமிழ்நாடு அரசு தகவல் தொழில் நுட்ப துறை செயலாளர் மற்றும் இந்து சமய அறநிலைய துறை சிறப்பு அலுவலர் குமரகுருபரன் நேற்று அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்தார். கோடை காலம் என்பதால் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், நிழற்பந்தல், முதலுதவி சிகிச்சை மையம் உள்ளிட்ட வசதிகளை செய்யுமாறு உத்தரவிட்டார். மேலும், அடுத்த மாதம் நடைபெறும் சித்ரா பவுர்ணமியன்று பக்தர்களின் வசதிக்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் விளக்கினார். பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்காமல் விரைவு தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொண்டார். இதுதாடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடன் விரைவில் ஆய்வு கூட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆய்வின்போது, அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் குமரரேசன், விழுப்புரம் மண்டல இந்து சமய அறநிலைய துறை இணை ஆணையர் சிவக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post (தி.மலை) அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள்

சிறப்பு அலுவலர் ஆய்வு

திருவண்ணாமலையில் அடுத்த மாதம் சித்ரா பவுர்ணமி விழா
appeared first on Dinakaran.

Related Stories: