ஒன்றிய அமைச்சர் சிந்தியாவும், குலாம்நபி ஆசாத்தும் இவ்வளவு கீழ்த்தரமாக பேசுவாங்கணு எதிர்பார்க்கல!: அசோக் கெலாட் காட்டம்

ஜெய்ப்பூர்: ஒன்றிய அமைச்சர் சிந்தியாவும், குலாம்நபி ஆசாத்தும், இவ்வளவு கீழ்த்தரமாக பேசுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் காட்டமாக கூறினார். காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவில் சேர்ந்து ஒன்றிய அமைச்சராக பதவி வகித்து வரும் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் காங்கிரஸ் முன்னாள் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோர், அவ்வப்போது காங்கிரஸ் தலைமை மற்றும் சோனியா காந்தி குடும்பத்திற்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் ராகுல்காந்தியை குறித்துவைத்து ஜோதிராதித்ய சிந்தியா கடுமையாக விமர்சனம் செய்தனர். அதேபோல் குலாம்நபி ஆசாத்தும், காங்கிரஸ் தலைமை குறித்து விமர்சனங்களை முன்வைத்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜஸ்தான் முதல்வருமான அசோக் கெலாட் அளித்த பேட்டியில், ‘குலாம்நபி ஆசாத்தும், ஜோதிராதித்ய சிந்தியாவும் சோனியா காந்தி குடும்பத்திற்கு எதிராக இவ்வளவு கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்துவார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

எத்தனையோ தாக்குதல்களுக்கு மத்தியிலும் ராகுல்காந்தி மக்களுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார். அவரது உறுதியான செயல்பாட்டால் பாஜக நிலைகுலைந்துள்ளது. அதனால்தான், காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறிய இதுபோன்ற தலைவர்களுக்கு (ஜோதிராதித்ய சிந்தியா, குலாம்நபி ஆசாத்) ‘டாஸ்க்’ ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் காங்கிரஸ், சோனியா காந்தி குடும்பத்திற்கு எதிரான கருத்துகளை தொடர்ந்து கூறவேண்டும். அவை பாஜக தலைவர்களின் வேண்டுகோளின்படி இருக்க வேண்டும். பாசிச சித்தாந்தத்திற்கு அவர்கள் துணை போய்விட்டனர்’ என்றார்.

The post ஒன்றிய அமைச்சர் சிந்தியாவும், குலாம்நபி ஆசாத்தும் இவ்வளவு கீழ்த்தரமாக பேசுவாங்கணு எதிர்பார்க்கல!: அசோக் கெலாட் காட்டம் appeared first on Dinakaran.

Related Stories: