முன்னுரிமையற்ற 16.80 லட்சம் குடும்ப அட்டைகளாக மாற்றம்: காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு, அமைச்சர் சக்கரபாணி பதில்

தமிழ்நாட்டில் 16.80 லட்சம் முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகளாக வகை மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு, அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்து பேசினார்.

விளவங்கோடு தொகுதி உறுப்பினர் விஜயதரணி(காங்கிரஸ்) பேசியதாவது: ரேசன் கடைகளில் முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகளை (என்.பி.எச்.எச்.) முன்னுரிமை குடும்ப அட்டைகளாக (பி.எச்.எச்.) என மாற்ற வேண்டும்.

அமைச்சர் அர.சக்கரபாணி: ஒன்றிய அரசு இந்தியா முழுவதும் உள்ள மாவட்டங்களில் நியாயவிலை கடைகளில் ஏப்ரல் 1ம்தேதி முதல் 100 கிலோ அரிசியுடன் ஒரு கிலோ செரிவூட்டப்பட்ட அரிசியை சேர்த்து வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஆனால், நாம் ஜூலை மாதம் வரை அவகாசம் கேட்டுள்ளோம். செரிவூட்டப்பட்ட அரிசியில் விட்டமின் பி-12 உள்ளது. ரத்த சோகை நோயை அது தடுக்கும். 16 லட்சத்து 80 ஆயிரம் முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள், முன்னுரிமை குடும்ப அட்டையாக வகைமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதனால், 45 லட்சம் குடும்ப உறுப்பினர்கள் பயன்பெற்றுள்ளனர்.

The post முன்னுரிமையற்ற 16.80 லட்சம் குடும்ப அட்டைகளாக மாற்றம்: காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு, அமைச்சர் சக்கரபாணி பதில் appeared first on Dinakaran.

Related Stories: