ஒண்டிமிட்டாவில் பிரமோற்சவம் கோலாகலம் 5ம் நாளில் மோகினி அலங்காரத்தில் கோதண்டராமர் வீதியுலா-இன்று திருக்கல்யாண உற்சவம்

திருமலை : ஒண்டிமிட்டாவில் 5ம் நாள் பிரமோற்சவ விழாவில் கோதண்டராமர் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றதுகடப்பா மாவட்டம், ஒண்டிமிட்டா கோதண்டராம சுவாமியின் வருடாந்திர பிரமோற்சவத்தின் 5ம் நாளான நேற்று காலை, ராமர் மோகினி அலங்காரத்தில் ஜகன்மோகனியாக எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது. இதில், கேரள மேளம் மற்றும் பக்தி குழுவினர் பஜனை மற்றும் கோலங்களுடன் நாதஸ்வர வாத்தியங்கள் முழங்க வீதி உலா நடைபெற்றது. பக்தர்கள் வழிநெடுகிலும் கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை அமிர்தத்திற்காக கடைந்தபோது அவர்கள் விரும்பிய அமுதம் கிடைத்தது. அதைப் பகிர்ந்து கொள்வதில் மோதலைத் தவிர்க்கவும், தேவர்களுக்கு அமிர்தத்தைப் பகிர்ந்தளிக்கவும் விஷ்ணு மோகினியாக பெண் வேடத்தில் தோன்றினார். அதுபோல் ராமர் தனது பக்தர்கள் மாயத்தில் சிக்கி கொள்ளாமல் இருக்க தன்னை காணும் பக்தர்கள் மாயத்தை எளிதாகக் கடக்க முடியும் என்று கூறும் வகையில் எழுந்தருளினார். இரவு கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதில் கோயில் துணை இஓ நடேஷ்பாபு, ஏ.இ.ஓ.கோபாலராவ், கண்காணிப்பாளர்கள் பி.வெங்கடேசய்யா, ஆர்.சி.சுப்பிரமணியம், கோயில் ஆய்வாளர் தனஞ்செயா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் இன்று நடைபெற உள்ளது. அதற்காக கோயில் அருகே பிரம்மாண்டமாக கல்யாணம் மேடை அமைக்கப்பட்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்கும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் முத்துக்கள், பட்டு வஸ்திரங்கள் சமர்பித்து திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்க உள்ளார்.

The post ஒண்டிமிட்டாவில் பிரமோற்சவம் கோலாகலம் 5ம் நாளில் மோகினி அலங்காரத்தில் கோதண்டராமர் வீதியுலா-இன்று திருக்கல்யாண உற்சவம் appeared first on Dinakaran.

Related Stories: