மறைமலைநகர் போர்டு ஆலையை வாங்குவது தொடர்பாக தமிழக அரசுடன் டாடா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்..!!

சென்னை: மறைமலைநகர் போர்டு ஆலையை டாடா நிறுவனம் வாங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. போர்டு இந்தியா நிறுவனம் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு காரணமாக சென்னையை அடுத்த மறைமலைநகர் மற்றும் குஜராத் சாமன்ட் நகர் ஆலைகளை மூடுவதாக அண்மையில் அறிவித்தது. இதனையடுத்து மறைமலைநகர் ஆலையில் ஊழியர்கள் வேலை இழப்பதை தடுக்கும் விதமாக வேறொரு நிறுவனத்திற்கு கைமாற்றும் முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் டாடா மோட்டார் நிறுவனம் ஆலையை வாங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக டாடா சன்ஸ் தலைவர் என், சந்திரசேகரன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடனான 2வது சுற்று உயர்மட்ட பேச்சுவார்த்தை 2 வாரத்தில் நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பேச்சுவார்த்தை இறுதியான பின்னர் முதலமைச்சர் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது. டாடா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குநர் கிரிஷ் வாக் ஏற்கனவே செப்டம்பர் 27ம் தேதி முதலமைச்சரை சந்தித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. …

The post மறைமலைநகர் போர்டு ஆலையை வாங்குவது தொடர்பாக தமிழக அரசுடன் டாடா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்..!! appeared first on Dinakaran.

Related Stories: