திருவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் கோயில் புரட்டாசி பிரம்மோற்சவ கொடியேற்றம்

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. கொரோனா பரவல் காரணமாக, செப்பு தேரோட்டம் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டு புரட்டாசி மாதம் விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வளாகத்தில் உள்ள பெரிய பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா மிகச்சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு பெரிய பெருமாள் பூதேவி- ஸ்ரீதேவி ஆகியோர் சர்வ அலங்காரத்தில் காட்சியளித்தனர். மாட வீதிகள் ரத வீதிகள் வழியாக மேளதாளம் முழங்க கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து, கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.பிரம்மோற்சவ கொடியை ஆண்டாள் கோயில் அர்ச்சகர் ரகுராம பட்டர் ஏற்றினார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளதால்,   தினமும் சாமி வீதியுலா புறப்பாடு நிகழ்ச்சிகள் கோயில் வளாகத்திலேயே நடைபெற உள்ளது. முக்கியமாக இந்த ஆண்டும் செப்பு தேரோட்டம் நடைபெறாது என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். பிரம்மோற்சவ  கொடியேற்ற நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் செய்துள்ளனர்….

The post திருவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் கோயில் புரட்டாசி பிரம்மோற்சவ கொடியேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: