திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்

வாழப்பாடி, மார்ச் 27: சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் வாழப்பாடியில் நடைபெற்றது. மாவட்ட திமுக செயலாளர் சிவலிங்கம் தலைமை வகித்தார். முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான நேரு கலந்து கொண்டு பேசினார். மேலும், புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதற்கான விண்ணப்ப படிவத்தையும், வாக்குச்சாவடி முகவர் நியமிப்பதற்கான விண்ணப்பத்தையும் அந்தந்த ஒன்றிய செயலாளர்களிடம் வழங்கி விரைந்து செயலாற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில், கலைஞரின் நூற்றாண்டு விழாவை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது, கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட 4 தொகுதியில் சுமார் 2 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும், தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையை, ஒவ்வொரு பகுதிகளிலும் துண்டுபிரசுரமாக விநியோகம் செய்யவேண்டும் என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில், மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, மேற்கு மாவட்ட செயலாளர் செல்வகணபதி, சேலம் பார்த்திபன் எம்பி., கருணாநிதி, ரேகா பிரியதர்ஷனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: