30 காசுக்கு மேல் குறைத்து முட்டை விற்க வேண்டாம்

நாமக்கல், மார்ச் 27: நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தலைவர் டாக்டர். செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் முட்டை இருப்பு இல்லை. தினமும் உற்பத்தியாகும் முட்டைகள், தினசரி விற்பனைக்கு அனுப்பப்படும் சூழல் தான் உள்ளது. முட்டை இருப்பு இல்லாத சூழ்நிலையிலும்,  நாமக்கல் மண்டலத்தில் 40 பைசா வரை மைனஸ் போவதாக அறிகிறோம். பண்ணையாளர்கள் முட்டை விற்பனையில் 30 காசு மைனசுக்கு மேல் கொடுக்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். அப்போது தான் மைனஸ் கண்ட்ரோல் ஆகும்.

வியாபாரிகள் யாராவது, அறிவிக்கப்பட்ட மைனசிற்கு மேல் முட்டை கேட்டால், முட்டை இல்லை என அனைத்து பண்ணையாளர்களும் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு மைனஸ் கட்டுக்குள் இருந்தால் மட்டும், வரும் மே 1ம் தேதி அமல்படுத்தப்பட உள்ள நோ மைனஸ் நெட் ரேட் என்ற இலக்கை நாம் அடைய முடியும். எனவே, இன்று (27ம் தேதி) முதல் அறிவிக்கப்பட்ட மைனசிற்கு மேல் முட்டை கேட்கும் வியாபாரிகள் பற்றி, தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க அலுவலகத்திலோ, தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர் சம்மேளன அலுவலகத்திலோ அல்லது என்இசிசி அலுவலகத்திலோ தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: