இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் கீழ்முகம் மற்றும் மேல்முகம் கிராமத்தின் அருகே, சூரியகவுண்டம்பாளையம் பொன்னி ஆற்று பாலத்தின் கீழ், பட்டி அமைத்து பன்றி வளர்ப்பில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள், கோழி, மாட்டு இறைச்சி மற்றும் மீன் கழிவுகளை இந்த பாலத்தில் கொட்டுகின்றனர். மேலும், மரம், செடிகள் முளைத்துள்ள நிலையில் சாக்கடை கழிவுநீர் குளம் போல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. சூரியகவுண்டம்பாளையம் ஊராட்சியில் சேகரிக்கும் குப்பை கழிவுகளை, திடக்கழிவு மேலாண்மை இடத்திற்கு கொண்டு செல்லாமல் நெடுஞ்சாலைத்துறை பாலத்தின் அடியில் கொட்டி தீவைத்து எரிக்கின்றனர். பல முறை அதிகாரிகளிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பன்றி வளர்ப்பை தடுக்க வேண்டும். தேங்கியுள்ள குப்பை மற்றும் கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: