வாலிபர் சங்கத்தினர் கையெழுத்து இயக்கம்

சேந்தமங்கலம்: கொல்லிமலை ஒன்றிய திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் செம்மேட்டில் நடந்தது. கூட்டத்திற்கு அவை தலைவர் செல்வம் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் செந்தில்முருகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு கட்சியின் சார்பில், பூத் கமிட்டி அமைத்து அதில் உள்ளவர்கள் அரசின் நலத்திட்டங்களை கிராமங்கள் தோறும் கொண்டு சேர்ப்பது, திமுக அரசு பொறுப்பேற்றவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொல்லிமலைக்கு கொண்டு வந்துள்ள புதிய திட்டங்கள், புதிய வழித்தடத்தில் பேருந்துகள், பழங்குடியினர் நலத்திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கு தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் காளியப்பன், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ஆனந்தபாபு, ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் செந்தாமரை செல்வி, சிந்தாமணி, சீரங்கன், பெரியசாமி, சின்னத்தம்பி, நேரு, ராஜா, பழனிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: