மல்லசமுத்திரத்தில் 72 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

மல்லசமுத்திரம்: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 3,300 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இந்த பருத்தியை கொள்முதல் செய்ய சேலம், ஈரோடு, அவிநாசி, திருப்பூர், கோவையை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் ஏலத்தை நடத்தினர். இதில் டி.சி.எச். ரகம் பருத்தி குவிண்டால் ₹8,180 முதல் ₹8,488 வரையிலும், பி.டி. ரகம் பருத்தி குவிண்டால் ₹7,590 முதல் ₹7,880 வரையிலும், கொட்டு ரகம் பருத்தி குவிண்டால் ₹4,240 முதல் ₹6,120 வரையிலும் விற்பனையானது. ஒட்டுமொத்தமாக விவசாயிகள் கொண்டுவந்த 3,300 மூட்டை பருத்தி ₹72 லட்சத்திற்கு விற்பனையானது என கூட்டுறவு சங்க அதிகாரி தெரிவித்தார்.

Related Stories: