தீப்பற்றி எரிந்த மின்கம்பம்

சேலம்: சேலம் அங்கம்மாள் காலனியில் மின் கம்பம் தீப்பற்றி எரிந்து, மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.சேலம் புது பஸ் ஸ்டாண்ட் அடுத்த அங்கம்மாள் காலனி கண்ணகி நகரில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு அங்குள்ள 2வது குறுக்கு தெருவில் உள்ள மின்கம்பத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. மள, மளவென பரவிய தீயால், திடீரென மின் கம்பத்தில் இருந்த பாக்ஸ் வெடித்து சிதறியது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அதேசமயம், அப்பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பும், இதே போல் மின்கம்பம் எரிந்ததால், தகுந்த பாதுகாப்பு மற்றும் முன் ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: