தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டியவர் கைது

சேலம்:  சேலம் குகை ஆண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (42). கூலிதொழிலாளியான இவர், நேற்று முன்தினம் அன்னதானப்பட்டி மாரியம்மன்கோயில் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை மர்மநபர் வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார். அதற்கு சரவணன், தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார். அப்போது, தான் பணம் கேட்டு மிரட்டியதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி விட்டு அந்த நபர் சென்றுள்ளார். இதுபற்றி அன்னதானப்பட்டி போலீசில் சரவணன் புகார் கொடுத்தார். எஸ்ஐ வெற்றிவேலன் விசாரணை நடத்தி, வழிப்பறி முயற்சியில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்த நெத்திமேடு முனியப்பன் கோயில் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (42) என்பவரை கைது செய்தார். பின்னர் அவரை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

Related Stories: