அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி

சேந்தமங்கலம்: புதுச்சத்திரம் ஒன்றியம், சர்க்கார் உடுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, முத்துப்புடையாம்பாளையம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜன் கண்காட்சியை துவக்கி வைத்தார். கண்காட்சியை வட்டார கல்வி Aஅலுவலர்கள்  சந்திரசேகரன், சுப்பிரமணியன், ஆசிரியர் பயிற்றுனர் செல்வராணி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். நிகழ்ச்சியில் தன்னார்வலராக பன்னீர் செல்வம், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் சண்முகப்பிரியா, பெற்றோர்கள் கலந்து கொண்டனர். கண்காட்சியில் நீர் மேலாண்மை, இயற்கை பாதுகாப்பு, புவி வெப்பமாதல், கழிவுநீர் சுத்திகரிப்பு பயன்பாடு, காற்றாலை மின்சாரம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை உதவியாசிரியர் கண்ணன் செய்திருந்தார்.

Related Stories: