கே.எஸ்.ஆர் கல்லூரியில் பழங்கால நாணயங்கள் கண்காட்சி

திருச்செங்கோடு, மார்ச் 19: கே.எஸ்.ஆர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் பழங்கால நாணயங்கள், கடிதங்கள், அஞ்சல் தளைகள், தீப்பெட்டி அட்டைகள், பத்திரங்கள் மற்றும் அரிய பொருட்களுக்கான கண்காட்சி நடைபெற்றது. கல்லூரி தலைவர் சீனிவாசன் மற்றும் செயல் இயக்குனர் சீனிவாசன் முன்னிலை வகித்தனர். மகளிர் கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் கண்காட்சியினை தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக நாணய சேகரிப்பாளர் தர்மராஜ், கண்காட்சியில் இடம்பெற்ற பொருள்களின் வரலாறுகள், நாணயங்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். பழைய மரபினை அறிந்து கொள்ளும் விதமாக மாணவிகளுக்கு இக்கண்காட்சி அமைந்தது. இதில் கல்லூரி துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: