நாமக்கல்லில் 22ம்தேதி யுகாதி பெருவிழா

நாமக்கல், மார்ச் 19: நாமக்கல்லில் வரும் 22ம் தேதி தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு, யுகாதி வெள்ளி விழா நடைபெறுகிறது. நாமக்கல்லில், மாவட்ட நாயுடுகள் நலச்சங்க நிர்வாகிகள் கூட்டம், சங்க தலைவர் ஆடிட்டர் வெங்கடசுப்ரமணியன் தலைமையில் நடந்தது. செயலாளர் நாராயணன், பொருளாளர் தங்கவேல், இளைஞரணி தலைவர் சக்திவெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், சங்கத்தின் சார்பில், வரும் 22ம் தேதி தெலுங்கு வருடப்பிறப்பு மற்றும் 25ம் ஆண்டு வெள்ளி விழா, யுகாதி பெருவிழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது. 22ம் தேதி காலை 8.30 மணி முதல், மதியம் 2 மணிவரை நாயுடு சமூக மணமாலை நிகழ்ச்சி நடைபெறும்.

இதில் சுமார் 800 மணமக்கள் ஜாதகங்கள் இடம்பெறும். காலை 10 மணிக்கு வெள்ளி விழா யுகாதி பெருவிழாவில், பள்ளி மாணவ மாணவியருக்கான ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, மாறுவேடப்போட்டி, பாட்டுப்போட்டி, மகளிருக்கான ஓவியப்போட்டி ஆகியவை நடத்தப்படுகிறது. யுகாதி விழாவில், மாவட்ட தலைமை நிலைய செயலாளர் கோவிந்தராஜூலு, மாவட்ட துணைத்தலைவர் வெங்டேசன், துணை செயலாளர் ரோகிணி, கவுரவ ஆலோசகர்கள் விஜயராகவன், மாவட்ட மகளிர் அணி தலைவி ரேகா ஆகியோர் விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

Related Stories: