அரசு பள்ளி கட்டுமான பணிக்கு முன்னாள் மாணவர்கள் ₹3.35 லட்சம் நிதி உதவி

பள்ளிபாளையம், மார்ச் 19: பள்ளிபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவர் உயரம் குறைவாக உள்ளது. இது போலவே பல வகுப்பறை கூரைகள் மழைக்காலங்களில் நீர்க்கசிவு ஏற்பட்டு வருகிறது. இவற்றை நமக்கு நாமே திட்டத்தில் சீர் செய்ய நகராட்சி நிர்வாகம் முயற்சிகளை மேற்கொண்டது. இந்த கட்டுமான பணிகளை மேற்கொள்ள ₹10 லட்சம் செலவாகும் என அதிகாரிகள் திட்டமதிப்பு தயார் செய்து கலெக்டரின் ஒப்புதலுக்கு அனுப்பினர். நமக்கு நாமே திட்டத்தில் மேற்கொள்ள, மக்கள் பங்களிப்பாக மூன்றில் ஒரு பங்கு தொகையான ₹3.35 லட்சத்தை 1972ல் படித்த முன்னாள் மாணவர்கள் திரட்டினர். இந்த தொகையை, முன்னாள் மாணவர்களின் பிரதிநிதிகள் நகரமன்ற தலைவர் செல்வராஜிடம் வழங்கினர். நிகழ்ச்சியில் நகரமன்ற துணைத்தலைவர் பாலமுருகன், நகராட்சி பொறியாளர் ரேணுகா, மேலாளர் மாலதி மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: