துறையூர் அருகே அனுமதியின்றி அரளைக் கல் ஏற்றிய டிராக்டர் பறிமுதல்

துறையூர், மார்ச் 18: துறையூர் அருகே அனுமதியின்றி அரளைக் கல் ஏற்றிச் சென்ற டிராக்டரை புவியியல் மற்றும் கனிம வளத்துறை தாசில்தார் பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைத்தார். திருச்சி புவியியல் மற்றும் கனிமங்கள் வளத் துறை தாசில்தார் ஜெயபிரகாஷ் தலைமையிலான அந்தத் துறை அதிகாரிகள் துறையூரை அடுத்த சொரத்தூர் பிரிவு ரோடு அருகே வாகனத் தணிக்கையில் நேற்று முன்தினம் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிழக்குவாடியைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் மகேஸ்வரன்(38) என்பவர் டிராக்டரில் அரளைக் கல் ஏற்றிச் சென்றார்.

அவரது வாகனத்தை புவியியல் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் மறித்து சோதனையிட்ட போது அதில் அரளைக் கற்களை அரசு அனுமதியின்றி எடுத்துச் செல்வது தெரிந்தது. உடனை டிராக்டரை பறிமுதல் செய்து துறையூர் போலீசில் தாசில்தார் ஜெயபிரகாஷ் ஒப்படைத்து புகார் அளித்தார். இதனையடுத்து துறையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மகேஸ்வரனைக் கைது செய்ததுடன், அரளைக் கற்களுடன் இருந்த டிராக்டரையும் பறிமுதல் செய்து துறையூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: