(வேலூர்) ரத்தினகிரி முருகர் கோயிலுக்கு சொந்தமான 0.21 ஏக்கர் நிலம் அளவீடு செய்து எல்லைக்கல் அமைப்பு இந்து சமய அறநிலையத்துறையினர் நடவடிக்கை வேலூர்மாவட்டம் அம்முண்டி கிராமத்தில்

திருவலம், மார்ச் 14: வேலூர்மாவட்டம் அம்முண்டி கிராமத்தில், ரத்தினகிரி முருகர் கோயிலுக்கு சொந்தமான 0.21 ஏக்கர் நிலம் அளவீடு செய்து எல்லைக்கல் நட்டு, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்கள் மீட்கும் நடவடிக்ைக தொடர்ந்து வருகிறது. அதேபோல் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களிலும் கோயில்களுக்கு ெசாந்தமான நிலங்கள் மீட்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சம்மந்தப்பட்ட நிலங்களில் எச்ஆர்சிஇ என்ற குறியீட்டுடன் கூடிய எல்லைக்கற்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி முருகர் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் வேலூர் மாவட்டம் திருவலம் அடுத்த அம்முண்டி கிராமத்தில், ரத்தினகிரி முருகன் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை தாசில்தார் செல்வி, கோயில் செயல் அலுவலர் சங்கர் ஆகியோர் முன்னிலையில் நில அளவையர் மற்றும் பணியாளர்கள் அம்முண்டியில் உள்ள கோயிலுக்கு சொந்தமான நிலம் 409, 410 சர்வே எண்ணில் 0.21 ஏக்கர் உள்ளது. அந்த நிலத்திைன அளவீடு செய்தனர். பின்னர் எச்ஆர்சிஇ என்ற குறியீட்டுடன் நிலத்திைன சுற்றி 13 எல்லைக்கற்கள் நட்டு வைத்தனர். இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துைற அதிகாரிகள் கூறுகையில், ‘இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து மீட்கப்பட்டு வருகிறது. அதன்படி ரத்தினகிரி பாலமுருகன் கோயிலுக்கு சொந்தமாக வேலூர் மாவட்டம் அம்முண்டியில் உள்ள கோயில் நிலத்தில் அளவீடு செய்து எல்லை கற்கள் நடும் பணி மேற்கொள்ளப்பட்டது, என்றனர்.

Related Stories: