இதயநோய் பாதித்த காவலர் சிகிச்சைக்கு சக காவலர்கள் ₹10.15 லட்சம் நிதியுதவி எஸ்பி வழங்கினார் காட்பாடி லத்தேரியில்

ேவலூர், மார்ச் 4: காட்பாடி லத்தேரியில் இதய நோய் பாதித்த காவலர் சிகிச்சைக்கு ₹10.15லட்சம் சக காவலர்கள் நிதி திரட்டி எஸ்பி மூலம் நேற்று வழங்கினர். காட்பாடி லத்தேரியில் முதல்நிலை காவலராக பணிபுரிந்து வருபவர் தீர்த்தகிரி. இவர் இதயநோயால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். அவருக்கு ரேடியோ மையோதிபதி எனும் அறுவை சிகிச்ைச பெற்று, தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டியுள்ளது. இந்நிலையில், காவலர் தீர்த்தகிரியின் மருத்துவ செலவுக்காக வேலூர் மாவட்டத்தைச் ேசர்ந்த காவலர்கள், காவல்துறை அதிகாரிகள் என்று அனைவரும் சேர்ந்து ₹10.15லட்சம் நிதி சேர்த்தனர். அந்த நிதியினை நேற்று ேவலூர் எஸ்பி ராஜேஷ்கண்ணன், இதய நோயினால் பாதிக்கப்பட்ட காவலர் தீர்த்தகிரி மற்றும் குடும்பத்தினரிடம் அதற்கான காசோலையை ேநரில் வழங்கினார்.

Related Stories: