57 ேபாக்குவரத்து போலீசாருக்கு ‘கூலிங்கிளாஸ்’ டிஎஸ்பி வழங்கினார் வேலூரில்

வேலூர், மார்ச் 3: வேலூரில் 57 போக்குவரத்து போலீசாருக்கு கூலிங்கிளாசை டிஎஸ்பி நேற்று வழங்கினார். வேலூரில் கோடை தொடங்குவதற்கு முன்பே வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் வெயிலை பொருட்படுத்தாமல் போக்குவரத்து போலீசார் தங்கள் பணிகளை செய்து வருகின்றனர். அவர்களுக்கு பழச்சாறு, தொப்பி மற்றும் கூலிங்கிளாஸ் வழங்க டிஐஜி முத்துசாமி உத்தரவிட்டார். அதன்படி அவர் இந்த திட்டத்தை ெதாடங்கி வைத்தார். முதற்கட்டமாக நேற்றுமுன்தினம் எஸ்பி ராஜேஷ்கண்ணனுடன் இணைந்து பழச்சாறு மற்றும் குளிர்மோர் வழங்கினார். இந்நிலையில் வேலூர் பழைய பஸ் நிலையம் திருவள்ளூவர் சிலை அருகே போக்குவரத்து போலீசாருக்கு கூலிங்கிளாஸ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதில் டிஎஸ்பி திருநாவுக்கரசு கலந்து கொண்டு 57 போக்குவரத்து போலீசாருக்கு கூலிங்கிளாஸ் அணிவித்தார். வடக்கு இன்ஸ்பெக்டர் சீனிவாசன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நாகராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர். வேலூரில் பணியில் உள்ள 53 போலீசார் உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள 200 பேருக்கு கூலிங்கிளாஸ் வழங்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து சாலை பாதுகாப்பு தொடர்பாக வாகன ஓட்டிகளிடம் துண்டு பிரசுரம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு டிஎஸ்பி திருநாவுக்கரசு வாழ்த்து தெரிவித்தார்.

Related Stories: