பொன்னுசாமி எம்எல்ஏ இல்லத்திருமண விழா

சேந்தமங்கலம்: சேந்தமங்கலத்தில் இன்று காலை, எம்எல்ஏ பொன்னுசாமி இல்ல திருமணத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைக்கிறார். சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி இல்ல திருமண விழா, இன்று(3ம் தேதி) காளப்பநாயக்கன்பட்டி அருகே வெட்டுக்காட்டில் நடைபெறுகிறது. இதில், மாநில இளைஞரணி செயலாளர் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை ஏற்று, காலை 9 மணிக்கு திருமணத்தை நடத்தி வைக்கிறார். இதற்காக 10 ஆயிரம் பேர் அமரக்கூடிய பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக நாமக்கலில் இருந்து சேந்தமங்கலம் வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, வண்டிப்பேட்டை ரவுண்டானா அருகே, ஒன்றிய திமுக செயலாளர் அசோக்குமார் தலைமையில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, கடைவீதி அரச மரத்தடியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, திமுக கொடியேற்று விழாவில் கலந்துகொண்டு கொடியேற்றி வைக்கிறார்.

இதையடுத்து, சேந்தமங்கலத்தில் இருந்து நைனாமலை செல்லும் சாலையில், மாப்பிள்ளையார் தோட்டத்தில் வரதராஜ பெருமாள் கோயில் மாசி மக தேரோட்டத்தை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை காலை 8 மணிக்கு தொடங்கி வைக்கிறார். இதில், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி., வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், பொன்னுசாமி எம்எல்ஏ, நாமக்கல் ராமலிங்கம் எம்எல்ஏ மற்றும் மாவட்ட திமுக நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொள்கின்றனர்.மோகனூரில் வள்ளியம்மன் நம்பியண்ணன் கோயில் விழாமோகனூர்: மோகனூரில், கொங்கு குலாலர் கிழங்கு நாடு 3 அண்ணன்மார்களுக்கு பாத்தியப்பட்ட வள்ளியம்மன், நம்பியண்ணன் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில், 16 ஆண்டுக்கு பின்பு பொங்கல் விழா துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று(3ம் தேதி) அதிகாலை குண்டம் இறங்குதல், பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், நண்பகல் மகா பூசை, பிற்பகல் ஊஞ்சல் பாட்டு, பிறந்தகத்து பிள்ளைகளுக்கு பிரசாதம் வழங்குதல், மாலை பூசாரி வரிசை, கும்பிடு கொடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, வள்ளியம்மன் அறக்கட்டளை அறங்காவலர்கள் செய்துள்ளனர்.

Related Stories: